Wednesday, December 29, 2010

Kalaignar's Kalai

இவ்வளவு நாட்களாக பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.  தினமும் கருணாநிதியும் ஜெயலலிதாவும் மாறி மாறி அறிக்கைகள் விட்டுக்கொண்டுதான் இருக்கிறார்களே தவிர ஒன்றும் ஆனபாடில்லை !  


கருணாநிதியின் அறிக்கைகளை தினமும் படித்து பார்த்தால் கொடுக்க வேண்டிய விளக்கங்களை கொடுக்காமல் அவன் சரியில்லை இவன் ஊழல்வாதி என்று பிதற்றுகிறாரே தவிர ராஜாவின் விஷயத்தை தொடுவதேயில்லை.  அதற்கு விளக்கமும் இல்லை. 


நான் குற்றவாளி இல்லை என்று சொல்லும் துணிச்சல் அவருக்கு இல்லை. நீ ஊழல்வாதியா என்ற கேள்விக்கு அவன் ஊழல்வாதி இவன் ஊழல்வாதி என்று பதில் சொல்லுகிறார்.  இப்படியே மக்களை முட்டாளாக்கி கொண்டு இருந்தால் கோட்டையின் வெளி வாசலை மக்கள் காட்டும் நேரம் வராமல் போய்விடுமாஎன்ன ?


ஜோசப் 

No comments:

Post a Comment