22-5-2011 அன்று தினத்தந்தியில் வெளியான முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 'மன ஓலம்' உள்ளத்தை தொடுவதாக உள்ளது. சிறுவயது முதலே தனக்கு உரியவைகளை பொதுமக்களுக்கு கொடுத்து உள்ளமகிழ்சியும் பேருவகையும் கொண்ட சிறந்த தமிழின தலைவர் முக, தான் கொடுத்தவைகளை பட்டியலிட்டு காட்டியிருகின்றார் அவற்றை கூட்டி பார்த்தால் கிட்டத்தட்ட பத்து கோடி ருபாய் அளவுக்கு வருகின்றது.
ஒரு தனி மனிதனாய் இவ்வளவு செய்வது பாராட்டத்தக்கது. ஆனால் உங்கள் சந்ததிகளும் கட்சியினரும் பொது மக்கள் பணத்தை தனி நிறுவனங்களுக்கும், தனி மனிதர்களுக்கும் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி கொள்ளை பொருளாய் கொடுத்ததுதான் பிரச்சனை. நீங்கள் மக்களுக்கு கொடுத்தது பத்து கோடி ஆனால் மக்களிடமிருந்து எடுத்தது ? 180000 கோடி.
பிள்ளைகள் தப்பு செய்த போது தட்டி கேட்காததால் தந்தையாய் தோல்வி,
உங்கள் மந்திரிகள் தவறுசெய்தபோது தட்டி கேட்காததால் தலைவராய் தோல்வி, கொள்கைகளை காத்தவர்கள் கொள்ளையர்களை காக்க முயற்சிக்கும்போது அரசியலிலும் தோல்வி.
வெற்றி இலக்கை அடைவதற்கு சற்று முன் இவ்வளவு பெரிய சறுக்கலா?
No comments:
Post a Comment