தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்கவேண்டும் என்று கருணாநிதி கூறியுள்ளார். சிதம்பரத்தின் கருத்துக்கு தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள கருத்து இது.
அடங்காத ஊருக்கு தான் ஊரடங்கு உத்திரவு. தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டிலும் புதுவையிலும் மிகவும் கெடுபிடியாக நடந்துகொண்டது எதை காட்டுகிறது? அணைத்து கட்சிகளும் பாகுபாடின்றி பணம் கொடுத்தது உங்களுக்கு தெரியாதா? புதுவையில் உங்கள் கட்சியினர் ஒரு சில இடங்களில் ஒரு ஓட்டுக்கு 2000 ருபாய் வரை கொடுத்தது என்ன பரம ரகசியமா? அல்லது ADMK பணம் கொடுத்தது யாருக்கும் தெரியாதா?
ஓட்டுக்கு பணம் கொடுக்கிறார்கள் என்று அணைத்து கட்சியினரும் கூரை மீது நின்று கூறி கொண்டிருந்தாலும் அணைத்து கட்சியினருக்கும் தங்கள் கட்சி வேட்பாளர்கள் பண விநியோகம் செய்கிறார்கள் என்று நன்றாக தெரியும். BJP யினர் கூட பணம் கொடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் பல கோடி பணம் அனாதையாக கிடந்தது என்ன கடவுள் வானத்திலிருந்து பொழிந்ததா? எல்லாம் மக்களுக்கு தெரியும்.
எனவே உங்கள் சங்கதிகளை பாராளுமன்றத்தில் விவாதிப்பதைவிட பட்டி தொட்டிகளில் நடக்கும் விவாதங்களை காது கொடுத்து கேளுங்கள் உண்மை விளங்கும்.
ஜோசப்.
No comments:
Post a Comment