ஒசாமா பின் லேடன். ரஷிய படைகள் ஆப்கானிஸ்தானை ஆக்ரமித்த போது அமெரிக்காவின் ஆசி பெற்ற போராளி. உலகெங்கும் தீவிரவாதம் இவர்களால் விதைக்க பட்ட போது அமெரிக்காவின் ஆயுத வியாபாரம் நன்றாக நடந்து கொண்டு இருந்தது.
வரம் கொடுத்தவன் தலையில் கையை வைத்த கதை - இரட்டை கோபுரம். பிறகென்ன போட்டு தள்ளிவிட்டார்கள். இவனை வைத்து அமெரிக்காவிடம் பிச்சை எடுத்து கொண்டிருந்த பாகிஸ்தானுக்கு தான் இது பெரிய இடி.
சொந்த மக்களை கொன்று குவிக்கும் நம் நாட்டு பின் லேடன்களை மக்கள் எப்போது இனம் கண்டுகொள்ள போகிறார்களோ.... கடவுளுக்கே வெளிச்சம்!
- 1984 சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் 10000 முதல் 17000 சீக்கியர்கள் கொல்லப்பட்டார்கள். கலவரம் மேற்பார்வை INC (இந்திய தேசிய காங்கிரஸ்) (லிங்க்: http://en.wikipedia.org/wiki/1984_anti-Sikh_riots )
- 2002 குஜராத் கலவரம் - கொல்லப்பட்டது 1000 முதல் 1200 - கலவரம் மேற்பார்வை BJP யின் அஞ்சா நெஞ்சன் நரேந்திர மோடி.
ஜோசப்.
No comments:
Post a Comment