29/05/2011 அன்று என் மனைவியுடன் பண்ருட்டியிலிருந்து விக்கரவாண்டி வரை என்னுடைய காரில் சென்று திரும்ப வேண்டிய அலுவல் இருந்தது. பண்ருட்டியிலிருந்து விழுப்புரம் கூட்டுரோடு வரை குண்டும் குழியுமான சாலை என் வேகத்தை குறைத்தது, கோபத்தை கூட்டியது, என் மனைவியின் உடல் நிலையை பாதித்தது (அவள் கர்ப்பமாக இருக்கிறாள்) என் காரின் தேய்மானம் அதிகரித்தது.
இப்படிப்பட்ட சாலைக்கா நாம் வரி கட்டுகிறோம் என்று எரிச்சல் வந்தது. போதாகுறைக்கு விக்கரவாண்டியில் உள்ள சுங்கச்சாவடியில் பயன்படுத்தாத சாலைக்காக ருபாய் 112/- செலுத்த நேர்ந்தது.
சாலைகளையும் ஆலைகளையும் அமைக்க வேண்டிய அரசுகள், எரிவாயு அடுப்பும் தொலைகாட்சி பெட்டியும் வாங்க செலவு செய்தால் நாடு குட்டிச்சுவராகாமல் வல்லரசாகவா மாறும்?
ஜோசப்.

No comments:
Post a Comment