Monday, May 30, 2011

என்ன கொடுமை சார் இது!

29/05/2011 அன்று என் மனைவியுடன் பண்ருட்டியிலிருந்து விக்கரவாண்டி வரை என்னுடைய காரில் சென்று திரும்ப வேண்டிய அலுவல் இருந்தது.   பண்ருட்டியிலிருந்து விழுப்புரம் கூட்டுரோடு வரை குண்டும் குழியுமான சாலை என் வேகத்தை குறைத்தது, கோபத்தை கூட்டியது, என் மனைவியின் உடல் நிலையை பாதித்தது (அவள் கர்ப்பமாக இருக்கிறாள்) என் காரின் தேய்மானம் அதிகரித்தது. 

இப்படிப்பட்ட சாலைக்கா நாம் வரி கட்டுகிறோம் என்று எரிச்சல் வந்தது. போதாகுறைக்கு விக்கரவாண்டியில் உள்ள சுங்கச்சாவடியில் பயன்படுத்தாத சாலைக்காக ருபாய் 112/- செலுத்த நேர்ந்தது. 

சாலைகளையும் ஆலைகளையும் அமைக்க வேண்டிய அரசுகள்,  எரிவாயு அடுப்பும் தொலைகாட்சி பெட்டியும் வாங்க செலவு செய்தால் நாடு குட்டிச்சுவராகாமல் வல்லரசாகவா மாறும்?

ஜோசப். 

Wednesday, May 25, 2011

கனிமொழிக்கு பினைவிடுப்பு தரலாமா?

ராஜ்ய சபை உறுப்பினரான திருமதி கனிமொழிக்கு நீதிமன்ற காவல் தேவையா? ....  ஒரு ஆங்கில படத்தில் வழக்கறிஞர் தன் கட்சிகாரருக்காக வாதாடுகையில், "... என் கட்சிகாரர் மிகவும் மோசமானவர், யாரையும் மதிக்கமாட்டார், எடுத்தெரிந்தாற்போல் பேசுவார், திமிராக நடந்து கொள்வார், அவரை எதிர் கட்சிக்காரருக்கு மட்டுமல்ல, எனக்கும் தான் பிடிக்காது.... ஆனால் இப்படிப்பட்ட காரணங்களுக்காக அவர் மீது கொலை பழி சாட்டுவது நியாயமல்ல"   ... என்று கூறுவார்.

திமுக மீது தொடுக்கப்பட்ட குற்றச்சாட்டு மிகவும் மோசமானதுதான், அதற்கு அவர்கள் விலையும் கொடுத்துவிட்டார்கள்.  அதிக தொகுதிகள், கேட்ட தொகுதிகள், தங்கபாலுவை வைத்து ....கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி........  என்பதுபோல் உட்கட்சி குழப்பம் (தங்கபாலுவுக்கு வேட்பு மனுவை முறைப்படி  தாக்கல் செய்ய தெரியாதா?), இதனால் காங்கிரஸ் காரர்களே எதிரணிக்கு ஒட்டு போட தூண்டப்பட்டது, கூட்டணி கட்சியை கைவிட்டது என்று கூடி கெடுத்தது காங்கிரஸ்.  மற்ற மூன்று மாநிலங்களில் சிறப்பாக செயல்பட்ட காங்கிரஸ், தமிழ்நாட்டில் மட்டும் எப்படி மண்ணை கவ்வியது?  மகன் செத்தாலும் பரவாயில்லை மருமகள் தாலி அறுக்கணும் என்று திமுகவை கைவிட்டு குழியில் தள்ளியது காங்கிரஸ்.

176000 கோடி அரசுக்கு வருமான இழப்பு. அந்த அளவுக்கு யாரோ பயனடைந்துள்ளனர். அதற்கு பதிலாக அவ்வளவு பணத்தையுமா பயனடைந்தவர்கள் திமுகவினருக்கு கொடுத்திருப்பார்கள்?

திருட்டு பொருளுக்கு தீட்டு விலை. அதிகபட்சம் 20000 கோடிக்கு மேல் இதனால் யாரும் (ராசா, திமுக, etc ) பயனடைந்திருக்கமாட்டார்கள்.  இந்த வரம்பு மீறல் நடந்ததற்கு முன்னரும் , நடக்கும் போதும்  ஜனநாயகத்தின் இரண்டாவது தூணான அதிகார வர்க்கம் என்ன செய்துகொண்டிருந்தது? இதில் ராஜாவுக்கு மட்டும் தான் பங்கு இருக்கின்றதா? அவ்வளவு திறமைசாலியா நம் ராஜா? 


மதுவகைகளை கடத்தி விற்பவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கும் நாடு ஒன்றில் மது கடத்தல்காரனிடம் மறைவிடத்தில் மதுவை விலைக்கு  வாங்கிய அந்த நாட்டு நீதிபதி அவனிடம் சொன்னானாம், "நீ போலீசில் மாட்டிக்கொண்டால், நானே உனக்கு மரண தண்டனை விதிக்க நேரிடும், ஜாக்கிரதையாய் இரு" என்று!

1984 சீக்கிய இன படுகொலையை திட்டமிட்டு செயல்படுத்திய காங்கிரஸ், தமிழின படுகொலையை தட்டி கேட்காத காங்கிரஸ், சினிமா கதாநாயகன் போல் பாதுகாப்பு முறைகளை மதிக்காமல், இரண்டு சக்கர வண்டியில்,  போராட்டம் நடத்தும் விவசாயிகளை சந்திக்க சென்ற ராகுல், சிறுபிள்ளைதனமாக எழுபது அடி பள்ளம் முழுக்க  சாம்பல் உள்ளது, அவை எல்லாம் மனிதர்களை எரித்த சாம்பல் என்று அறிக்கைவிட்ட அவலம் நிகழ்ந்த காங்கிரஸ், ஏதோ சுத்த சன்மார்க்கர்கள் போல் குற்றம் செய்தவர்களை சட்டம் சும்மா விடாது என்று அறிக்கை விடுவது யாரை ஏமாற்றுவதற்கு?

குற்றம் நடக்கும் போதும், அதற்கு முன்னரும் பதவில் இருந்தவர்கள், அதிகாரத்தை கையில் வைத்திருந்தவர்கள் அனைவரும் எங்கு இருக்கிறார்கள்? அவர்களுக்கு தண்டனை கொடுக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?

குற்றம் நடந்த பிறகு பயனடைந்தவர்கள் பட்டியலை கையில் வைத்து கொண்டு அவர்களுக்கு உரிய தனி மனித சுதந்திரத்தை பறிப்பது தவறானது.   இந்த தவறை JJ விஷயத்தில் திமுகவும் செய்தது. குற்றம் சாட்டியஉடனே, நிரூபிக்க படாத குற்றச்சாட்டுகளுக்காக  தண்டனை கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?  இவர்கள் என்ன பெயரை மாற்றிக்கொண்டு, மாறுவேடத்தில், கள்ள கடவுச்சீட்டு கொண்டு நாட்டை விட்டு ஓடியா போய்விட போகிறார்கள்?

தனி மனித சுதந்திரம் பாதிக்கப்படும்போது நமது அடிப்படை ஜனநாயக உரிமை பறிக்கப்படுகிறது.  இதை நாம் அனுமதிக்க கூடாது.  இதுவரை சிபிஐ தூங்கிகொண்டிருந்தபோது சாட்சியங்களும் ஆதாரங்களும் என்னவாயின?

கனிமொழியை கைது செய்ய தேர்தல் முடிவுகளுக்காக காத்துகிடந்து ஏன்?  மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்துவிட்டால் என்ன செய்வது என்று அஞ்சிதானே? ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது ஒரு சட்டம், இல்லாதபோது ஒரு சட்டமா? இதுதான் நேர்மையான விசாரனையா?

சிபிஐ ஆடி அசைந்து கொண்டு விசாரணை நடத்திக்கொண்டு இருக்கும், அதுவரை இவர்களை சிறையில் வைத்திருப்பார்கள? அப்படி சிபிஐ குற்றங்களை நிரூபிக்க தவறினால், பறிக்கப்பட்ட தனி மனித சுதந்திரங்களுக்கு என்ன விலை கொடுப்பார்கள்? 

எனவே குற்றம் சாட்டப்பட்டவர்களை எல்லாம் சிறையில் அடைத்துக்கொண்டு, அவர்களுக்கு பினைவிடுப்பு கொடுக்ககூடாது என்று வாதாடி நேரத்தை வீணடிப்பதைவிட, விசாரணையில் முனைப்பை காட்டி குற்றவாளிகளை ஆதரங்களுடன் கைது செய்து தண்டனை வாங்கிகொடுங்கள்.  அதுவரை தனி மனித உரிமைகளை பறிக்காதீர்கள்.

ஜோசப்.



Sunday, May 22, 2011

கொடுத்தது பத்து, எடுத்தது? !!!!!!!!

22-5-2011 அன்று தினத்தந்தியில் வெளியான முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 'மன ஓலம்'  உள்ளத்தை தொடுவதாக உள்ளது.  சிறுவயது முதலே தனக்கு உரியவைகளை பொதுமக்களுக்கு கொடுத்து உள்ளமகிழ்சியும் பேருவகையும் கொண்ட சிறந்த தமிழின தலைவர் முக, தான் கொடுத்தவைகளை பட்டியலிட்டு காட்டியிருகின்றார் அவற்றை கூட்டி பார்த்தால் கிட்டத்தட்ட பத்து கோடி ருபாய் அளவுக்கு வருகின்றது. 
ஒரு தனி மனிதனாய் இவ்வளவு செய்வது பாராட்டத்தக்கது. ஆனால் உங்கள் சந்ததிகளும் கட்சியினரும் பொது மக்கள் பணத்தை தனி நிறுவனங்களுக்கும், தனி மனிதர்களுக்கும் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி கொள்ளை பொருளாய் கொடுத்ததுதான் பிரச்சனை. நீங்கள் மக்களுக்கு கொடுத்தது பத்து கோடி ஆனால் மக்களிடமிருந்து எடுத்தது ?    180000 கோடி. 

பிள்ளைகள் தப்பு செய்த போது தட்டி கேட்காததால் தந்தையாய் தோல்வி, 
உங்கள் மந்திரிகள் தவறுசெய்தபோது தட்டி கேட்காததால் தலைவராய் தோல்வி, கொள்கைகளை காத்தவர்கள் கொள்ளையர்களை காக்க முயற்சிக்கும்போது அரசியலிலும் தோல்வி. 

வெற்றி இலக்கை அடைவதற்கு சற்று முன் இவ்வளவு பெரிய சறுக்கலா?


Saturday, May 14, 2011

2011 - தேர்தல் - தமிழக மக்களின் தோல்வி !

இந்த சிறப்பான ஆழமான கருத்தை கூறியவர் யார் தெரியுமா? குஷ்பூ ! ஒரு பேட்டியில் "இந்த தோல்வி திமுக வின் தோல்வி அல்ல, மாறாக தமிழக மக்களின் தோல்வி" என்று கூறியுள்ளார்.  2006 தமிழக சட்டசபை தேர்தலில் மொத்த வாக்குகளில் 26.40 சதவிகிதம் பெற்ற திமுக, கூட்டணி கட்சிகளின் ஆதரவில் மொத்தம் 44.57 சதவிகித வாக்காளர்களின் பிரதிநித்துவம் மட்டுமே பெற்று ஆட்சி அமைத்தது.  இதைதான் ஜெயலலிதா திரும்ப திரும்ப மைனாரிட்டி அரசு என்று கூறிக்கொண்டு இருந்தார்கள். 

ஆனால் 2011 தேர்தல் நிலவரம் மிகவும் வித்யாசமானது. மாற்றத்தை மட்டும் விரும்பி மக்கள் வாக்களிக்கவில்லை. எதிர் கட்சி அந்தஸ்து கூட உங்களுக்கு கொடுக்கப்படவில்லை.  இதற்கு என்ன பொருள்? உங்களுக்கு,  அடுத்த அரசின் நடவடிக்கைகளை சட்டமன்றத்தில் விமர்சிக்கவோ, கேள்வி கேட்கவோ மக்கள் அனுமதிக்கவில்லை.  உங்கள் திட்டங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. ஆனால் என்ன காரணத்திற்க்காக இப்படி நடந்தது? எரிகிற வீட்டில் பிடுங்குகிறவரை லாபம் என்று தமிழக எதிர்காலத்தை பற்றி யோசிக்காமல் ஆட்சி செய்ததுதான் காரணம். 

TIMES NOW டிவியில் தமிழக மக்கள் ஓட்டு போட திமுக பணம் வழங்கியது என்று வேறு கட்சியினர் கூறியபோது  - ( இந்த விஷயத்தில் யாரும் யாரையும் குற்றம் சாட்ட முடியாது என்பது அனைவருக்கும் தெரியும்.) -  திருமதி ஜெயந்தி நடராசன் அவர்களும் திருமதி குஷ்பூ அவர்களும் தமிழர்களை முட்டாள்கள்  என்று நினைக்கிறீர்களா? என்று நல்ல பதில் கொடுத்தார்கள், ஆனால் 2011 - தேர்தல் தமிழக மக்களின் தோல்வி என்று கூறியபோது, எழுதி கொடுத்ததை மனப்பாடம் செய்து வசனம் பேசியது போல் இருந்தது!  - உங்களை குற்றம் சொல்ல முடியாது, உங்கள் நடிப்பு திறமையை பார்த்து வியந்து உங்களுக்கு கோயில் கட்டிய தமிழகமல்லவா இது?


 
ஜோசப்
 


Friday, May 13, 2011

2011-மீண்டும் ஜெயலலிதா முதல்வராகிறார்.

தி மு க மீண்டும் எழுமா என்பது வரும் ஐந்து ஆண்டுகளில் AIADMK எப்படி ஆட்சி செய்யபோகிறது என்பதை பொறுத்துதான் இருக்கிறது. மக்களால் கொடுக்கப்பட்ட அதிகாரத்தை துஷ்ப்ரயோகம் செய்து சொந்த நலன்களில் கவனம் செலுத்தியதே DMK வின் வீழ்ச்சிக்கு காரணம். 

அறுவடையில் மட்டும் பங்கு கொண்டவர்கள் செய்த தவறுகள்,  உழுது விதைத்து வளர்த்தவர்களுக்கு வினையாய் போய்விட்டது. தன் வாழ்நாள் முழுவதும் கட்சிக்காக உழைத்து, வாழ்நாள் சாதனையாளர் என்ற முடியை சூடுவதற்குள்,  தன் குடும்ப உறுப்பினர்களும் கட்சியினரும் சேர்ந்து செய்த ஊழல்களினாலும் தான்தோன்றித்தனங்களினாலும் முகத்தை மூடிக்கொண்டு அவமானப்பட்டு தன் வாழ்க்கை தோல்வியில் முடிவதை இந்த தள்ளாத வயதில் சகித்துக்கொண்டிருக்கும் கலைஞரை பார்க்க பரிதாபமாக உள்ளது. 


DMK குடும்பத்தில் பிளவு ஏற்படுமா என்று TIMES NOW டிவி யில் கேட்கப்பட்டபோது "எங்கள் குடும்பத்தில் பிளவு ஏற்படாது" என்று குஷ்பூ உரிமை எடுத்து கொண்டாலும் நடந்து முடிந்த தேர்தல் பிரசாரத்தில் உங்கள் பேச்சுக்கள் எங்களை எரிச்சல் அடைய செய்தன. 

குஷ்பூ, வடிவேலு, பாக்கியராஜ் ஆகியவர்கள், "எள் தான் எண்ணைக்கு காய்கிறது, எலி புழுக்கை எதற்கு காய்கிறது?" என்ற பழமொழியை நினைவூட்டினார்கள். 

தங்கள் வாழ்க்கையையே தமிழ் நாட்டிற்காக அர்ப்பணித்தவர்கள், கண்ணியம் மிக்கவர்களான பகுத்தறிவு பகலவன், பேரறிஞர், கலைஞர், வைகோ  போன்றவர்கள் அலங்கரித்த பிரசார மேடைகளை இப்போது அலங்கரித்தவர்கள் யார்? அவர்களை ஏன் அனுமதித்தீர்கள்? 

ரத்தத்தை சூடாக்கி பகுத்தறிவை தூசிதட்டிய உங்கள் அம்பு பேச்சுக்கள் எங்கே?  நகைச்சுவை நம் மண்ணில் மலிந்து கிடக்கின்றது. அதை கேட்கவா உங்களை நாடினோம்? 
ஜெயலலிதாவின் பெயர் கொண்ட அனைத்தையும் விமர்சனம் செய்துவிட்டு பெயர் மாற்றினீர்கள் அதில் நியாயம் இருந்தது, பிறகு எதற்கு எல்லா திட்டங்களுக்கும் "கலைஞர்" திட்டம் என்று பெயர் வைத்தீர்கள்? பொது விநியோக பொருள்களின் பாக்கெட்களில் உங்கள் போட்டோ ஏன் வந்தது?

அரசாங்கம் பார்க்க வேண்டிய வேலைகளை பார்க்காமல் விட்டுவிட்டு, எங்கள் வீடுகளுக்கு டிவி  வாங்கி தர உங்களை யார் கேட்டது? என் மனைவியை கர்ப்பமாக்கும் எனக்கு அவளுக்கு வேண்டியதை செய்ய முடியாதா?  நீங்கள் யார் இதையெல்லாம் கொடுப்பதற்கு? இதெல்லாம் தனி நபர்கள் தங்களுக்கு செய்துகொள்ள கூடியவை. 

தனி மனிதனால் செய்யமுடியாததை அரசாங்கம் செய்ய வேண்டும். சாலைகள் அமைக்க வேண்டும், சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டும், மக்களின் வரிப்பணம் வீணாகாமல் சரியான திட்டங்களை தீட்டி செயல்படுத்த வேண்டும்.


இப்படி விதை நெல்லை சமைத்து சாப்பிட்டால் எதிர்காலம் என்னாவது? தன் வாலை தனக்கே சமைத்து போட்டாலும் கறி சோறு போட்டான் என் எஜமானன் என்று நாய் வேண்டுமானால் நன்றியுடன் இருக்கலாம்.  ஆனால் எங்கள் வரிப்பணத்தை எடுத்து எங்களுக்கே கொடுத்துவிட்டு "நாங்கள் சாதித்தோம், சொன்னதை செய்தோம், தமிழக மக்கள் நன்றியுடன் வாக்களிப்பார்கள்"  என்று எங்களை ஏளனம் செய்ததை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. எரிச்சலடைந்துவிட்டோம் மன்னித்து விடுங்கள். 

உப்பை வாரி தின்றவன் தண்ணீரை குடிக்கவேண்டும், வினை விதைத்தவன் வினை அறுப்பான், தீதும் நன்றும் பிறர் தர வாரா. போன்ற பழமொழிகள் தமிழுக்கு பெருமை. ஆனால் இவற்றில் உங்கள் கட்சியினருக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விட்டதா? பொது வாழ்க்கைக்கு வந்த உடனேயே கனிமொழிக்கு இந்த சோதனைகள் எதற்கு? 


கொள்கைகளுக்காகவும், உரிமைகளுக்காகவும் போராட்டங்கள் நடத்தி சிறை சென்ற பாரம்பரியம் இப்போது, கொள்ளைகளுக்காகவும், அதிகார வரம்புமீரல்களுக்காகவும், கூடி சதி செய்ததற்காகவும் சிறை செல்வது வெட்ககேடுதானே?

ஜோசப்







Tuesday, May 10, 2011

If I were Pakistan's Advisor?

Hi Again,

Exposed, Shameful, Deceptive, beguile, & Deceit Pakistan has an immediate agenda to save its ugly face NOW!  Harboring the most wanted under their armpit and shamelessly getting alms from US to pretend hunting for him (OBL).  Exposed and Naked they now need to save their ugly face.  The whole world is watching them being reprehended by the one who declared them their friend and called them as one of the Most Favoured Nations (MFN)

What Next?  Is it not now very urgent for Pakistan to save its face?  In order to buy time to cool the issue, it urgently needs to distract the whole world.  

So at this juncture, if i were to advise Pakistan, I would suggest them to launch a massive assault on India, Preferably with an Atom Bomb which they have ill fetched, and justify its action by declaring in their parliament (of course with a lot of rehearsal), "It is a matching response to India which have demanded arrest of , trial and punishment to our Real Leaders and by that way has trespassed our Sovereignty"


Joseph

Thursday, May 5, 2011

அமெரிக்கா தொடர்ந்து பாகிஸ்தானுக்கு பண உதவி செய்யும்.

கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் பாகிஸ்தானில் அமெரிக்க போர் ஹெலிகாப்டர்கள் ரகசியமாக ஒரு நிகழ்ச்சியை நடத்துகிறார்கள் அது இந்த அணு சக்திபடைத்த பாகிஸ்தானுக்கு தெரியவேயில்லை.  இப்படிப்பட்ட பாகிஸ்தானுக்கு உதவுவதால் அமெரிக்காவுக்கு என்ன பயன்?  இது உதவி அல்ல, மாறாக, அமெரிக்கா தங்கள் ராணுவ நிலைகளை அங்கு வைத்திருப்பதற்கு வாடகை.  ஆண்டுக்கு 6000 கோடி ருபாய் கொடுத்தேனும் தங்கள் ராணுவ நிலைகள் இங்கு இருந்தால்தான் அவர்களால் பூமி உருண்டையின் இந்த பக்கம் இருக்க முடியும். அணுவை பற்றி தெரியாத நாய்களுக்கு அணு உலைகளையும் அணு ஆயுதங்களையும் கொடுத்து தங்கள் வியாபாரத்தை பெருக்கி கொண்டிருக்கும் வியாபார தரகன் தான் அமெரிக்கா. செலவில்லாமல் வந்த அணு விஞ்ஞான விபரங்களை இந்த நாய் (பாகிஸ்தான்) ஈரானுக்கு கொடுத்திருக்கின்றது. 

அமெரிக்காவின் இந்த ஈன தந்திரங்கள் எல்லாம் எதற்கு? ரஷியாவின் உதவியினால் வளர்ந்துவரும் இந்தியாவின் வளர்ச்சியை கண்காணிக்கத்தான்.  இந்திய அரசு தமிழீழம் நிர்மூலமாக்கப்படும்போது தலையிடாததால் சீனாவுக்கு இலங்கை செல்லபிள்ளையாகிவிட்டது.  இதனால் மொத்த இந்தியாவுக்கே பாதுகாப்பு சிக்கல் உருவாகியுள்ளது. இந்திய தலைவர்களின் அணுகுமுறை சிறுபிள்ளைதனமாக இருக்கும் பட்சத்தில் நாம் யாரை நொந்து கொள்வது?

இஸ்ரெயலில் யாருக்காவது பாலஸ்தின போர் வீரர்களால் உயிரிழப்பு ஏற்பட்டால், குறைந்தது ஒன்றுக்கு ஒன்று என்று பாலஸ்தீன உயிரை வாங்கியபின்தான் அடுத்த கட்ட பேச்சே நடக்கிறது. ஆனால் தமிழர்களின் நிலைமை என்ன? எத்தனை மீனவர்கள் செத்தாலும் இலங்கை அரசிடம் பல்லை இளித்துக்கொண்டு அங்கு நடக்கும் தங்கள் தொழிலுக்கு இடைஞ்சல் வந்து விட கூடாது என்பதால் செயலற்று கிடக்கும் இந்திய அரசின் மற்றும் அரசியல்வாதிகளின்  பேடித்தனத்திற்கு முற்று புள்ளி வைக்கும் காலம் எப்போது வருமோ?

ஜோசப்.

Monday, May 2, 2011

ஒசாமா பின் லேடன்

ஒசாமா பின் லேடன்.  ரஷிய படைகள் ஆப்கானிஸ்தானை ஆக்ரமித்த போது அமெரிக்காவின் ஆசி பெற்ற போராளி. உலகெங்கும் தீவிரவாதம் இவர்களால் விதைக்க பட்ட போது அமெரிக்காவின் ஆயுத வியாபாரம் நன்றாக நடந்து கொண்டு இருந்தது. 

வரம் கொடுத்தவன் தலையில் கையை வைத்த கதை - இரட்டை கோபுரம். பிறகென்ன போட்டு தள்ளிவிட்டார்கள். இவனை வைத்து அமெரிக்காவிடம் பிச்சை எடுத்து கொண்டிருந்த பாகிஸ்தானுக்கு தான் இது பெரிய இடி. 

சொந்த மக்களை கொன்று குவிக்கும் நம் நாட்டு பின் லேடன்களை மக்கள் எப்போது இனம் கண்டுகொள்ள போகிறார்களோ....  கடவுளுக்கே வெளிச்சம்! 

  - 1984 சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் 10000 முதல் 17000 சீக்கியர்கள் கொல்லப்பட்டார்கள். கலவரம் மேற்பார்வை INC (இந்திய தேசிய காங்கிரஸ்)  (லிங்க்: http://en.wikipedia.org/wiki/1984_anti-Sikh_riots )

   - 2002 குஜராத் கலவரம் - கொல்லப்பட்டது 1000 முதல் 1200 - கலவரம் மேற்பார்வை BJP யின் அஞ்சா நெஞ்சன் நரேந்திர மோடி.  

ஜோசப்.


பாரளுமன்றத்திலா பட்டிதொட்டிகளிலா?

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்கவேண்டும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.  சிதம்பரத்தின் கருத்துக்கு தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள கருத்து இது. 

அடங்காத ஊருக்கு தான் ஊரடங்கு உத்திரவு.  தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டிலும் புதுவையிலும் மிகவும் கெடுபிடியாக நடந்துகொண்டது எதை காட்டுகிறது? அணைத்து கட்சிகளும் பாகுபாடின்றி பணம் கொடுத்தது உங்களுக்கு தெரியாதா?  புதுவையில் உங்கள் கட்சியினர் ஒரு சில இடங்களில் ஒரு ஓட்டுக்கு 2000 ருபாய் வரை கொடுத்தது என்ன பரம ரகசியமா? அல்லது ADMK பணம் கொடுத்தது யாருக்கும் தெரியாதா?

ஓட்டுக்கு பணம் கொடுக்கிறார்கள் என்று அணைத்து கட்சியினரும் கூரை மீது நின்று கூறி கொண்டிருந்தாலும் அணைத்து கட்சியினருக்கும் தங்கள் கட்சி வேட்பாளர்கள் பண விநியோகம் செய்கிறார்கள் என்று நன்றாக தெரியும். BJP யினர் கூட பணம் கொடுத்துள்ளனர். 

தமிழ்நாட்டில் பல கோடி பணம்  அனாதையாக கிடந்தது என்ன கடவுள் வானத்திலிருந்து பொழிந்ததா? எல்லாம் மக்களுக்கு தெரியும். 

எனவே உங்கள் சங்கதிகளை பாராளுமன்றத்தில் விவாதிப்பதைவிட பட்டி தொட்டிகளில் நடக்கும் விவாதங்களை காது கொடுத்து கேளுங்கள் உண்மை விளங்கும். 


ஜோசப்.

மிகப்பெரும் வழக்கறிஞர் ஜெயலலிதாவா கருணாநிதியா!

ஜெயலலிதா தன்னை மிகப்பெரும் வழக்கறிஞராக கற்பனை செய்துகொண்டு நிறைய கேள்விகளை கேட்டிருக்கிறார். 2 ஜி  அலைகற்றை ஒதுக்கீடு தொடர்பான வழக்கு நடைபெற்று கொண்டிருப்பதால், அவைகளுக்கு எல்லாம் பதில் சொல்வது சட்டப்படி சரியாக இருக்காது. 

மேற்கண்ட நியாயமான கூற்று கலைஞர் அவர்களது!

பிறகு எப்படி சட்ட ரீதியாக நடக்கும் வழக்கில் சட்ட ரீதியாக ஜெயலலிதா வாய்தா வாங்குவதை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம் நடத்தியது அவர் கட்சி? 

பிறகு எப்படி "குற்றம் செய்யாதவர்கள் மீது , அவா இவா என்று கூறி கிண்டல் செய்ததால் கொலை வழக்கு போட்டு பழி வாங்குகிறார்கள்" என்று வழக்கு நடந்துகொண்டிருக்கும்போதே தீர்ப்பு கூறினார் கலைஞர்? - ஜெயேந்திரர் மீது அப்படி என்ன ஒரு திராவிட தாகம்?

உங்கள் குடுமி சண்டையில் நாடு கெட்டதுதான் மிச்சம். பண்ருட்டி தொகுதியில் திரு. வேல்முருகன் அண்ணா பல்கலைகழகம் கொண்டு வர காட்டிய தீவிரம் நீங்கள் நாட்டை ஆள காட்டினால், நம் தமிழ் நாடு எங்கேயோ சென்றுவிடும். 

 ஜோசப். 

Thursday, April 14, 2011

ஒரு சக்ரவர்த்தியின் வீழ்ச்சி !

ஒரு சக்ரவர்த்தியின் வீழ்ச்சி !

வடிவேலு !  இதுவரை இந்த உலகம் கண்டிராத அளவுக்கு சினிமா துறையில் ஒரு புரட்சி செய்த வடிவேலு, திரை உலகின் முடி சூடா சக்ரவர்த்தியாக திகழ்ந்துகொண்டிருகிறார்.  முக்கியமாக தமிழ் திரை உலகம் உலகுக்கு தந்த சொத்து இவர் என்றால் அது கொஞ்சம் கூட மிகையில்லை. 

நடிப்பிலேயே மிக கடினமான நகைச்சுவை இவருக்கு வெண்ணையில் கத்தியை போன்றது. தலைமுறை நடிகர்களை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு இவர் ஒரு பிறவி நகைச்சுவை மன்னன். 

இவருடைய நடிப்பும் பேச்சும் தமிழ் மக்களிடையே ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது அனைவரும் அறிந்ததே. இவருடைய பாணியை பல நட்சத்ர நடிகர்களும் கூட காப்பியடிப்பது அனைவரும் அறிந்ததே. 

இப்படிப்பட்ட ஒரு சிறந்த கலைஞன் இரட்டை கோபுரம் போல் சரிந்து விழும் நிலைமை ஏற்பட்டுள்ளது. ஒரு சிறந்த கலைஞன் தனக்கு என்று ஒரு தனித்துவத்தை உருவாக்கி அதில் நிலையாய் நின்று தன் பால் அனைவரையும் ஈர்க்கும் சக்தி படைத்தவன். 

அப்படிப்பட்ட சிறந்த கலைஞனான வடிவேலு தனக்கென்று உள்ள தனித்துவத்தை உதறி தள்ளி, யாருமே கண்டிராத உயரத்திலிரிந்து பல படிகள் கீழே இறங்கி கட்சி சாயம் பூசிக்  கொண்டார். 

கருப்பு நாகேஷ் என்று அழைத்த பொது கண்ணியமாக தலை வணங்கி ஏற்றுகொண்ட வடிவேலு, கருப்பு எம்ஜியார் என்று விஜயகாந்த் அழைக்கப்படுவது பற்றி விமர்சனம் செய்திருக்க கூடாது. 

பல கலைஞர்களை திரை துறைக்கு அறிமுகப்படுத்தி வாழ்வு கொடுத்த வடிவேலு, யானை பலம் கொண்டிருந்தாலும், அரசியல் முதலைகள் உள்ள தண்ணீரில் காலை விட்டது தன் தலையில் தானே மண்ணள்ளி 
 போட்டுகொண்டதற்கு சமம். ஏன் தெரியுமா? நேற்று நடந்த தேர்தலில், நிச்சயமாக அதிமுக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. ஜெயலலிதா அவர்கள் தனி பெரும்பான்மை பெற்று விடுவார்கள், அப்போது நீங்கள் உங்கள் முகத்தை எங்கு வைத்து கொள்வீர்கள்?    உங்கள் பாசாங்கு பலிக்குமா? முதலிலேயே சிந்தித்திருந்தால் வரப்போகும் பல  பிரச்சனைகளிலிருந்து உங்களை நீங்கள் காப்பாற்றிகொண்டிருக்கலாம்.  நாங்களும் உங்களை நல்ல நகைச்சுவை சக்கரவர்த்தியாக கொண்டாடியிருக்கலாம். 

முன்னோர்கள் சொன்ன மொழிகளுக்கு அர்த்தம் கண்டவர்கள் பிழைத்துக்கொள்வார்கள் - நுணலும் தன் வாயால் கெடும்! 

ஜோசப்

Saturday, February 19, 2011

Pirated softwares

Once I had a chat with one of my friends who is an authorised distributor of Tally software from tally solutions.  During the course of our talks he was very heavy on those who pirated tally software.  I need to mention that tally software is a revolution in the field of accounting that has helped many in simplifying their accounting needs.  He said, "those who used crack version or pirated version of tally are !@#$%^%&&*(*!.  

His organisation being a registered private limited company, he has an infrastructure of around 50 computers with a decent hall to train people in tally software.  All these computers run on Windows platform.  I asked him how much cost he incurred in getting genuine windows software for all his computers. He said, nothing!  All the systems are maintained by some computer mechanic who has a pirated windows software to run his business!

Jose

Friday, February 18, 2011

Was that Redundant?


Press Information Bureau 
Government of India
Ministry of Rural Development 


17-February-2011 11:57 IST

Connecting Rural Roads in Tamil Nadu

The Ministry of Rural Development has released grant in aid worth Rs. 140,00,00,000 crore (Rs. One hundred and forty crore only) as part payment of 2nd installment of Phase-VI, for construction of rural roads in Tamil Nadu under Pradhan Mantri Gram Sadak Yojana (PMGSY).The sum is from the special window created in NABARD (National Bank for Agriculture & Rural Development) under RIDF as grants in aid to the Tamil Nadu Rural Housing & Infrastructure Development Cooperation (TNRHIDC). TNRHIDC is the agency executing the works taken up under Pradhan Mantri Gram Sadak Yojana (PMGSY) in the state.

Pradhan Mantri Gram Sadak Yojana is a 100 % centrally sponsored scheme to provide road connectivity in the rural areas of the country. PMGSY envisages connectivity to all habitations with a population of 500 persons and above in the rural areas and about 250 persons and above in respect of the hilly states, tribal areas and desert areas through good and all weather roads.

AKT /BS

Wednesday, February 2, 2011

Save Panruti from Pollution.

.................Air emissions from open tire fires have been shown to be more toxic (e.g., mutagenic) than those of a combustor, regardless of the fuel. Open tire fire emissions include "criteria" pollutants, such as particulates, carbon monoxide (CO), sulfur oxides (SO2), oxides of nitrogen (NOx), and volatile organic compounds (VOCs). They also include "non-criteria" hazardous air pollutants (HAPs), such as polynuclear aromatic hydrocarbons (PAHs), dioxins, furans, hydrogen chloride, benzene, polychlorinated biphenyls (PCBs); and metals such as arsenic, cadmium, nickel, zinc, mercury, chromium, and vanadium. Both criteria and HAP emissions from an open tire fire can represent significant acute (short-term) and chronic (long-term) health hazards to firefighters and nearby residents. Depending on the length and degree of exposure, these health effects could include irritation of the skin, eyes, and mucous membranes, respiratory effects, central nervous system depression, and cancer. Firefighters and others working near a large tire fire should be equipped with respirators and dermal protection. Unprotected exposure to the visible smoke plume should be avoided................. (source: http://www.elaw.org/node/2764)

Burning Tyres at Panruti, Cuddalore District. (Photos on 01-02-2011)








Where are those who are employed by the Law abiding people to check these pollutors? 

Joseph.

Rounding Off - 379 crores.

CAG Report indicated a revenue loss of Rs. 176379 Crores to the Exchequer in 2G Spectrum allocation.  Indians have gone to the level of rounding off 379 Crores (Though statistically correct!).  Finally A. Raja has been arrested by CBI.  Raja has paid his price for his loyalty towards his party super heads!  Instead of becoming famous for his various contributions to the telecom sector, he has become notorious.  All his toil is a spoil.

Indian Political parties can be on tracks only if they have funds.  To contest an election is not a simple task for a party.  They spend thousands of crores during elections.  Bargains at all levels have to be met by money.  Now that politics is not purely service to the people, it is a business.  In a term of 5 years, pay-back period should at least be 3 to 4 years.

Collections for transfers, Subsidy Loans, all types of registrations, Licences, Clearances etc etc are the pay backs to the politicians and their parties.

Inspite of his loyalty to the party, he has been made a Scape Goat by its leaders!  Sure, they will cover him up if they need him else scrap him.

Now the Drama has begun.  Let's wait and watch but don't miss the pittance to be distributed by the parties before the election day! THE ELECTION WHERE WE DECIDE BETWEEN THE WORSE AND THE WORST.


Joseph.

Thursday, January 27, 2011

Yashwanth Sonawane

May his Soul Rest in Peace.  Nasik District Additional Collector Shri. Yashwanth Sonawane was put at stakes by Mafia on 25th of January, 2011 at Panewadi in Manmat Town.  He is a victim of large scale corruption in the bureaucracy.  These mafias cannot exist without patronage by the Politicians.  Such Corrupt politicians could not exist without the mandate of the people.  It is unbelievable that Police did not know the existence of such mafias or do not have nexus with them.

India's Law and order could be kept under control with the existing law.  The law enforcing agencies yield to the fancies of the Politicians in order to curry financial and other favours.  Politicians in general are corrupt.  They cannot corrupt the country without the assistance of bureaucrats.

India is a country of few rich peoples who could purchase anything they want.  Bureaucrats toying with the ideas of mafias are like children playing with fierce and venomous snake.  Brutal killings are just peanuts for them.  Beware bureaucrats, never trust their loyalty.  If the system is not cleared, though you may be a strict law enforcing authority all your dreams and your family's dreams could be put at stakes by irresponsible, uneducated, freak, unpatriotic, disorderly, unruly, ill begotten, ill broughtup, unethical, enemies of the State - Mafias.

Democracy is a system in which 51 fools could rule over 49 geniuses.  By electing corrupt politicians we corrupt the system in which our generations would live perpetually at the mercy of mafias run by them.  Choice is with us.  We deserve our Government.

CA. A. Joseph Arputharaj